வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரியை வீழ்த்தி யாழ்.மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி நேற்றுமுன்னதினம் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
இரண்டு கல்லூரிகளின் கீதத்துடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 95 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
24 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இனிங்ஸை ஆடிய சென்.ஜோன்ஸ் அணி உதயனன் அபிஜோய்சாந்த்தின் அதிரடி 121 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.
248 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி ஆடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நேற்று (06) ஆட்டம் முடிய் போது 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்தது.
எனினும் 3 ஆம் நாள் ஆட்டத்தில் திசோன் நிதர்சன் இணைந்து 91 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போர்; சென் ஜோன்ஸ் கல்லூரியை வீழ்த்திய யாழ்.மத்திய கல்லூரி வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரியை வீழ்த்தி யாழ்.மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி நேற்றுமுன்னதினம் யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.இரண்டு கல்லூரிகளின் கீதத்துடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் இனிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 95 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. 24 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இனிங்ஸை ஆடிய சென்.ஜோன்ஸ் அணி உதயனன் அபிஜோய்சாந்த்தின் அதிரடி 121 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.248 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி ஆடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நேற்று (06) ஆட்டம் முடிய் போது 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்தது. எனினும் 3 ஆம் நாள் ஆட்டத்தில் திசோன் நிதர்சன் இணைந்து 91 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.திசோன் 81 ஓட்டங்களையும் நிதர்சன் 44. ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர். ஆட்டநாயகனாக திசோன் தெரிவானர்.