• Aug 08 2025

மஞ்சத்தில் எழுந்தருளி அருட்காட்சியளித்த நல்லூரான்!

Chithra / Aug 8th 2025, 8:43 am
image


வரலாற்று சிறப்பு மிக்க  நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா நேற்றையதினம்  சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மாலை  இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து,  

சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகிய மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலித்துள்ளார்.

மஞ்சத்தில்  எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமியின் காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கூடியிருந்தனர்.


கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

20 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

மஞ்சத்தில் எழுந்தருளி அருட்காட்சியளித்த நல்லூரான் வரலாற்று சிறப்பு மிக்க  நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா நேற்றையதினம்  சிறப்பாக இடம்பெற்றுள்ளது.மாலை  இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து,  சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகிய மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலித்துள்ளார்.மஞ்சத்தில்  எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமியின் காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று கூடியிருந்தனர்.கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.20 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement