அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அரச பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ,
பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
1979 ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வளவு மோசமான பாதகங்களை, கொடூரங்களை கடந்த 47 ஆண்டுகளாக நிகழ்த்தியிருக்கிறது என்பதை இங்கு விபரிக்கவோ விவாதிக்கவோ வேண்டியதில்லை.
புதிய சட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகள் குறையும் சூழலை உருவாக்கக் கூடும் இச்சட்டம் கொண்டு வரப்படுமாயின் அது அரசியல் கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக அமையலாம்.
சமூக ஜனநாயக சக்தியான எமது கட்சியானது புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை எதிர்க்கின்றோம்.
சட்டம் தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்காமல் அவசர அவசரமாக முடிவெடுப்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது.
விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினுடைய வீரியம் எதுவும் குறையாத வகையில் புதிய ஏற்பாடுகளுடன் புதிய சட்டத்தை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
எனவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் புதிய சட்டத்தை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
புதிய சட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகள் குறையும் சூழலை உருவாக்கக்கூடும்:தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கும் புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டம் ஜனநாயக அடிப்படைகளையே பாதிக்கும் அபாயம் கொண்டது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அரச பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் ,பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 1979 ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பயங்கரவாத தடைச்சட்டம் எவ்வளவு மோசமான பாதகங்களை, கொடூரங்களை கடந்த 47 ஆண்டுகளாக நிகழ்த்தியிருக்கிறது என்பதை இங்கு விபரிக்கவோ விவாதிக்கவோ வேண்டியதில்லை.புதிய சட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகள் குறையும் சூழலை உருவாக்கக் கூடும் இச்சட்டம் கொண்டு வரப்படுமாயின் அது அரசியல் கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக அமையலாம்.சமூக ஜனநாயக சக்தியான எமது கட்சியானது புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை எதிர்க்கின்றோம்.சட்டம் தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்காமல் அவசர அவசரமாக முடிவெடுப்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது.விரிவான பொதுக் கலந்துரையாடல் அவசியம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினுடைய வீரியம் எதுவும் குறையாத வகையில் புதிய ஏற்பாடுகளுடன் புதிய சட்டத்தை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.எனவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் புதிய சட்டத்தை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.