• Jun 10 2026

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Ziya / Jun 10th 2026, 12:57 pm
image

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்ன் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் விசேட தடயவியல் அகழ்வாராய்ச்சி நேற்று நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மிகத் தீவிரமாக இடம்பெற்ற போதே இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.


நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் போது, மிகக் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டிருந்த புதிதாக ஒரு சிசுவினுடைய எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நிபுணர்களால் தரைக்கடியில் அடையாளம் காணப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் சர்வதேச தரம் வாய்ந்த தடயவியல் விதிகளுக்கமைய துல்லியமாகச் சுத்தம் செய்யப்பட்டு, பிரத்தியேகமாக இலக்கமிடப்பட்டன.


அதனைத் தொடர்ந்து, அங்கு ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த சிறுவர்களின் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாகப் பொதியிடப்பட்டன.


செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு ஆகிய இரு வேறு பகுதிகளில் இருந்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுகளின் மூலம் மொத்தமாக 327 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.


அவற்றில், சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் கூட்டுப் பரிசோதனைகளுக்காக இதுவரை 311 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தரைக்கடியில் இருந்து முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நீதிமன்றக் கட்டுக்காவலில் 112ஆவது சான்றுப்பொருள்

மேலும், நேற்று தோண்டப்பட்ட விசேட அகழ்வுக் குழி ஒன்றில், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் மிக நெருக்கமாகக் காணப்பட்ட பழைய நாணயக் குற்றி ஒன்று தடயவியல் அதிகாரிகளால் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.


குறித்த நாணயக் குற்றியை இந்தப் புதைகுழியின் காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான மிக முக்கிய சான்றாகக் கருதி, 112 ஆவது சான்றுப்பொருளாக அதிகாரிகள் இலக்கமிட்டுள்ளனர். அத்துடன், மேலதிக பரிசோதனைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அது தற்போது நீதிமன்றக் கட்டுக்காவலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்ன் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் விசேட தடயவியல் அகழ்வாராய்ச்சி நேற்று நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் மிகத் தீவிரமாக இடம்பெற்ற போதே இந்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் போது, மிகக் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டிருந்த புதிதாக ஒரு சிசுவினுடைய எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நிபுணர்களால் தரைக்கடியில் அடையாளம் காணப்பட்டன. பின்னர் அவை அனைத்தும் சர்வதேச தரம் வாய்ந்த தடயவியல் விதிகளுக்கமைய துல்லியமாகச் சுத்தம் செய்யப்பட்டு, பிரத்தியேகமாக இலக்கமிடப்பட்டன.அதனைத் தொடர்ந்து, அங்கு ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த சிறுவர்களின் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாகப் பொதியிடப்பட்டன.செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டு ஆகிய இரு வேறு பகுதிகளில் இருந்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அகழ்வுகளின் மூலம் மொத்தமாக 327 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.அவற்றில், சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் கூட்டுப் பரிசோதனைகளுக்காக இதுவரை 311 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தரைக்கடியில் இருந்து முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நீதிமன்றக் கட்டுக்காவலில் 112ஆவது சான்றுப்பொருள்மேலும், நேற்று தோண்டப்பட்ட விசேட அகழ்வுக் குழி ஒன்றில், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் மிக நெருக்கமாகக் காணப்பட்ட பழைய நாணயக் குற்றி ஒன்று தடயவியல் அதிகாரிகளால் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.குறித்த நாணயக் குற்றியை இந்தப் புதைகுழியின் காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான மிக முக்கிய சான்றாகக் கருதி, 112 ஆவது சான்றுப்பொருளாக அதிகாரிகள் இலக்கமிட்டுள்ளனர். அத்துடன், மேலதிக பரிசோதனைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அது தற்போது நீதிமன்றக் கட்டுக்காவலில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement