இலங்கையின் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன்பிடிப் படகு இன்று (05) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அதிலிருந்த 10 பொதிகளில் காணப்பட்ட போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று (04) கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டது.இதன்போது, படகில் இருந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் இன்று காலை மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆழ்கடலில் பாய்ந்து சென்ற கடற்படை ரகசியப் படகில் கைப்பற்றப்பட்ட அதிர்ச்சிப் பொருள் - சிக்கிய ஐவர் இலங்கையின் தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த மீன்பிடிப் படகு இன்று (05) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அதிலிருந்த 10 பொதிகளில் காணப்பட்ட போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதன்போது, 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று (04) கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டது.இதன்போது, படகில் இருந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் இன்று காலை மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.