நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவொன்று நிறுவப்படும் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சிப்பாய்கள் நலன்புரி பிரிவு அனைத்து இராணுவ முகாம்களிலும் உள்ள கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்படும்.
இதன்மூலம், ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் குடும்பங்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் எளிதாக்கப்படும் எனவும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவு இன்று முதல் ஆரம்பம் நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவொன்று நிறுவப்படும் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த சிப்பாய்கள் நலன்புரி பிரிவு அனைத்து இராணுவ முகாம்களிலும் உள்ள கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்படும். இதன்மூலம், ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் குடும்பங்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் எளிதாக்கப்படும் எனவும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.