• May 20 2025

என்றும் எங்கள் இதயங்களில் தலைவரின் மகன் வாழ்வான்- பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் வெளிப்படை..!

Sharmi / May 19th 2025, 12:25 pm
image

விடுதலைப்புலிகளின் தலைவர் மகன் பாலச்சந்திரன் இன்றும் எங்கள் இதயங்களில் வாழ்கின்றான் என்று பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மே 18 ஆம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்று விட்டோம் எனத் தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன். 

தலைவரின் குழந்தை பாலச்சந்திரன் 12 வயதில் கொல்லப்பட்ட போது நான் அவரின் கதையை எழுதினேன். அவரை நேரடியாகப் பார்த்திராத போதிலும் நான் அவரைப் பற்றி எழுதினேன். தந்தையும் தாயும் எவ்வாறு சிந்திப்பார்கள், சமூகம் எவ்வாறு சிந்திக்கும் என நான் எழுதினேன்.

கைது செய்யப்பட்ட பின்னர் 12 வயது சிறுவன் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை குறித்து என்ன நினைப்பார்கள் என்று எழுதினேன். 

ஆனால் இன்று பாலச்சந்திரன் எங்கிருக்கின்றார். அவர் எங்கள் இதயங்களில் இன்றும் வாழ்கின்றார். இங்கிருக்கின்ற ஒவ்வொருவரது உடலின் இடது பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். பாலச்சந்திரன் இன்றும் வாழ்கின்றான். என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பான்.- என்றார்.

என்றும் எங்கள் இதயங்களில் தலைவரின் மகன் வாழ்வான்- பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் வெளிப்படை. விடுதலைப்புலிகளின் தலைவர் மகன் பாலச்சந்திரன் இன்றும் எங்கள் இதயங்களில் வாழ்கின்றான் என்று பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.மே 18 ஆம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்று விட்டோம் எனத் தெரிவித்தார்கள். இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன். தலைவரின் குழந்தை பாலச்சந்திரன் 12 வயதில் கொல்லப்பட்ட போது நான் அவரின் கதையை எழுதினேன். அவரை நேரடியாகப் பார்த்திராத போதிலும் நான் அவரைப் பற்றி எழுதினேன். தந்தையும் தாயும் எவ்வாறு சிந்திப்பார்கள், சமூகம் எவ்வாறு சிந்திக்கும் என நான் எழுதினேன்.கைது செய்யப்பட்ட பின்னர் 12 வயது சிறுவன் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை குறித்து என்ன நினைப்பார்கள் என்று எழுதினேன். ஆனால் இன்று பாலச்சந்திரன் எங்கிருக்கின்றார். அவர் எங்கள் இதயங்களில் இன்றும் வாழ்கின்றார். இங்கிருக்கின்ற ஒவ்வொருவரது உடலின் இடது பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். பாலச்சந்திரன் இன்றும் வாழ்கின்றான். என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பான்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement