• May 29 2025

என்னையும் முன்னாள் எம்.பிக்கள் 40 பேரையும் கைது செய்ய அரசு திட்டம்! - விமல் வீரவன்ச பகிரங்கம்

Chithra / May 27th 2025, 1:18 pm
image


அரசாங்கம் தன்னையும் 40 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம், கைதுசெய்யப்படவேண்டிய 40 அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவிடம் கையளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பட்டியலில் உள்ளவர்களிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் இயக்குநர் ஜனாதிபதி செயலகத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்கின்றார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அந்த பட்டியலில்  எனது பெயர் உள்ளது, காஞ்சன விஜயசேகர, ரமேஸ் பத்திரன ஆகியோரின் பெயர்களும் உள்ளன, மகிந்தானந்த அளுத்கமகேயும் இவ்வாறே கைதுசெய்யப்பட்டார்.

முன்னைய அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் அமைச்சுகளின் கீழ் வரும் திணைக்களங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்கின்றனர் ஆனால் அதற்காக  முன்னாள் அமைச்சர்களை கைதுசெய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

என்னையும் முன்னாள் எம்.பிக்கள் 40 பேரையும் கைது செய்ய அரசு திட்டம் - விமல் வீரவன்ச பகிரங்கம் அரசாங்கம் தன்னையும் 40 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகம், கைதுசெய்யப்படவேண்டிய 40 அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை இலஞ்ச ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைகுழுவிடம் கையளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.பட்டியலில் உள்ளவர்களிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்வதற்காக ஆணைக்குழுவின் இயக்குநர் ஜனாதிபதி செயலகத்திற்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்கின்றார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அந்த பட்டியலில்  எனது பெயர் உள்ளது, காஞ்சன விஜயசேகர, ரமேஸ் பத்திரன ஆகியோரின் பெயர்களும் உள்ளன, மகிந்தானந்த அளுத்கமகேயும் இவ்வாறே கைதுசெய்யப்பட்டார்.முன்னைய அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் அமைச்சுகளின் கீழ் வரும் திணைக்களங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பிலேயே விசாரணைகளை மேற்கொள்கின்றனர் ஆனால் அதற்காக  முன்னாள் அமைச்சர்களை கைதுசெய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement