• Apr 14 2026

நீதிபதியான முதல்மாற்றுத்திறனாளி -தடைகளைத் தாண்டிசாதித்த பெண்

Ziya / Feb 13th 2026, 9:30 am
image

https://www.facebook.com/share/v/1CWT6xPx1L/

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா,கேரளாவில்  சிவில் நீதிபதியாகும் முதல்  பார்வையற்ற  மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்குரிய சாதனையை படைத்துள்ளார்.


24 வயது தான்யா நாதன் பிறவியிலிருந்தே 100% பார்வை சவால் உடையவர். 


2025ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நீதிபதி தேர்வு எழுதக்கூடிய உரிமையை உறுதிப்படுத்தியது.


முன்னர், நீதித்துறை சேவை தேர்வுகளில் பார்வையற்றோர் பங்குபெற தடை விதிக்கப்பட்டிருந்தது. 


“மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எந்தவித பாகுபாடையும் எதிர்கொள்ளக் கூடாது” என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


அதனை தொடர்ந்து கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படிப்பில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று வழக்கறிஞராக அவர்  பதவி ஏற்றார்.


படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் டிஜிட்டல் வடிவிலும் பிரெய்லி வடிவிலும் கிடைப்பதில்லை.எனவே, தேவையான குறிப்புகளை மாற்றி தயாராகும் இந்த வழிமுறை அதிக நேரத்தை எடுத்ததாக தான்யா கூறுகிறார்.


“நான் எல்.எல்.பி. படிப்பை படிக்க முடியுமா என பலர் கேட்டனர் ஆனால், நான் அதில் கவனம் செலுத்தவில்லை” என தன்னம்பிக்கையும் உறுதியையும் வெளிப்படுத்தினார்.


நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக அணுகக்கூடியதாக மாற்றப்பட வேண்டும் என்றும், பழைய ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்துவது மூலம் சம வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் தான்யா வலியுறுத்துகிறார்.


இளம் வயதில்  பெரும் சாதனையை புரிந்து ,மாற்றுத்திறனாளிகளுக்கு  இவர் முன் மாதிரியாக திகழ்கின்றார்.

நீதிபதியான முதல்மாற்றுத்திறனாளி -தடைகளைத் தாண்டிசாதித்த பெண் https://www.facebook.com/share/v/1CWT6xPx1L/கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா,கேரளாவில்  சிவில் நீதிபதியாகும் முதல்  பார்வையற்ற  மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்குரிய சாதனையை படைத்துள்ளார்.24 வயது தான்யா நாதன் பிறவியிலிருந்தே 100% பார்வை சவால் உடையவர். 2025ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நீதிபதி தேர்வு எழுதக்கூடிய உரிமையை உறுதிப்படுத்தியது.முன்னர், நீதித்துறை சேவை தேர்வுகளில் பார்வையற்றோர் பங்குபெற தடை விதிக்கப்பட்டிருந்தது. “மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எந்தவித பாகுபாடையும் எதிர்கொள்ளக் கூடாது” என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.அதனை தொடர்ந்து கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படிப்பில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று வழக்கறிஞராக அவர்  பதவி ஏற்றார்.படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் டிஜிட்டல் வடிவிலும் பிரெய்லி வடிவிலும் கிடைப்பதில்லை.எனவே, தேவையான குறிப்புகளை மாற்றி தயாராகும் இந்த வழிமுறை அதிக நேரத்தை எடுத்ததாக தான்யா கூறுகிறார்.“நான் எல்.எல்.பி. படிப்பை படிக்க முடியுமா என பலர் கேட்டனர் ஆனால், நான் அதில் கவனம் செலுத்தவில்லை” என தன்னம்பிக்கையும் உறுதியையும் வெளிப்படுத்தினார்.நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக அணுகக்கூடியதாக மாற்றப்பட வேண்டும் என்றும், பழைய ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்துவது மூலம் சம வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் தான்யா வலியுறுத்துகிறார்.இளம் வயதில்  பெரும் சாதனையை புரிந்து ,மாற்றுத்திறனாளிகளுக்கு  இவர் முன் மாதிரியாக திகழ்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement