சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (10) ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொழும்பு தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பழைய எரிபொருள்கொள்கலனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயை அணைக்க நீண்ட நேர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. காரணத்தை அறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சப்புகஸ்கந்தவில் ஏற்பட்ட தீ விபத்து - முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று (10) ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த பழைய எரிபொருள்கொள்கலனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து தீயை அணைக்க நீண்ட நேர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. காரணத்தை அறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.