• Jul 08 2025

பங்களாதேஷ் - இலங்கை அணி ஒருநாள் தொடரின் இறுதியாட்டம் இன்று!

shanuja / Jul 8th 2025, 11:43 am
image

சுற்றுலா பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என சமநிலை பெற்றுள்ள நிலையில் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான ஆட்டம் இன்று (08) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.


கொழும்பில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியும், இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் வெற்றிபெற்றன. 


இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றவுள்ளது.


இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற இரண்டு  ஒருநாள் தொடர்களை பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணி இலங்கையுடன் இரு தொடர்களை மாத்திரம் வென்றிருந்தாலும் அவை இரண்டும் (2021,2023) இறுதியாக கைப்பற்றியவையாகும்.


இலங்கை அணி கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து 3-0 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் பின் தற்போது 6 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை. 


இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டு கால இழப்பை இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மீட்குமா? என்ற ரீதியில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பங்களாதேஷ் - இலங்கை அணி ஒருநாள் தொடரின் இறுதியாட்டம் இன்று சுற்றுலா பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என சமநிலை பெற்றுள்ள நிலையில் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான ஆட்டம் இன்று (08) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.கொழும்பில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியும், இரண்டாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் வெற்றிபெற்றன. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற இரண்டு  ஒருநாள் தொடர்களை பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணி இலங்கையுடன் இரு தொடர்களை மாத்திரம் வென்றிருந்தாலும் அவை இரண்டும் (2021,2023) இறுதியாக கைப்பற்றியவையாகும்.இலங்கை அணி கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து 3-0 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் பின் தற்போது 6 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை. இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டு கால இழப்பை இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மீட்குமா என்ற ரீதியில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement