• May 14 2026

வன இலாகா அலுவலகத்தின் கதவுகள் உடைத்து துப்பாக்கி மற்றும் ரவைகள் திருட்டு!

shanu / Jan 3rd 2026, 10:28 pm
image

மட்டக்களப்பு புணானை வன இலகா அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (01)இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி மற்றும் ரவைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அலுவலகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த துப்பாக்கி மற்றும் சமையலறை உபகரணங்கள் உட்பட்ட பொருட்கள் களவாடி சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த நிலையத்தில் வன இலகா திணைக்கள உத்தியோகத்தர்கள் காவல் கடமையில் இல்லாத போது அதனை அறிந்த நபர்கள் அங்கு சென்று திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


இதன்போது சொற்கன் துப்பாக்கி - 01, அதற்கு பயன்படும் ரவைகள் மற்றும் சமையலறை பொருட்கள் என்பன களவாடப்பட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்பாக வாழைச்சேனை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

வன இலாகா அலுவலகத்தின் கதவுகள் உடைத்து துப்பாக்கி மற்றும் ரவைகள் திருட்டு மட்டக்களப்பு புணானை வன இலகா அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (01)இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி மற்றும் ரவைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த துப்பாக்கி மற்றும் சமையலறை உபகரணங்கள் உட்பட்ட பொருட்கள் களவாடி சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நிலையத்தில் வன இலகா திணைக்கள உத்தியோகத்தர்கள் காவல் கடமையில் இல்லாத போது அதனை அறிந்த நபர்கள் அங்கு சென்று திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது சொற்கன் துப்பாக்கி - 01, அதற்கு பயன்படும் ரவைகள் மற்றும் சமையலறை பொருட்கள் என்பன களவாடப்பட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்பாக வாழைச்சேனை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement