• May 12 2025

மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணம்; யாழிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கோரிக்கை கடிதம்

Chithra / May 12th 2025, 11:33 am
image


கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி  யாழ்ப்பாணத்தை தலமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 

இக் கடிதத்தில்,

இந் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மிகவும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.

கொழும்பில் கடந்த 2025.04.29 தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி. டில்ஷி அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் அக் குற்றத்தை மேற்கொண்டவர்கள் மீது உரிய விசாரணை இடம்பெற்று காலதாமதமின்றி தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்துகின்றோம்.

பெண்கள் சார்ந்த நீதித்துறை, சட்டத்துறை சார்ந்தவர்கள் பொறுப்புடன் செயற்பட்டு குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி சிறுவர்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் எமது நாட்டில் வன்முறை, துஷ்பிரயோகங்கள் அற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் விழிப்புடன் செயற்படுவோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணம்; யாழிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கோரிக்கை கடிதம் கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி  யாழ்ப்பாணத்தை தலமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இக் கடிதத்தில்,இந் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மிகவும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.கொழும்பில் கடந்த 2025.04.29 தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி. டில்ஷி அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் அக் குற்றத்தை மேற்கொண்டவர்கள் மீது உரிய விசாரணை இடம்பெற்று காலதாமதமின்றி தகுந்த தண்டனை வழங்க வலியுறுத்துகின்றோம்.பெண்கள் சார்ந்த நீதித்துறை, சட்டத்துறை சார்ந்தவர்கள் பொறுப்புடன் செயற்பட்டு குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி சிறுவர்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.எதிர்காலத்தில் எமது நாட்டில் வன்முறை, துஷ்பிரயோகங்கள் அற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் விழிப்புடன் செயற்படுவோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement