• May 29 2025

யுத்தத்தால் கிடைத்த சுதந்திரத்தை தற்போதைய அரசாங்கம் சீர்குலைக்க கூடாது- மொட்டு கட்சி வலியுறுத்து..!

Sharmi / May 28th 2025, 8:42 am
image

நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்று சுதந்திரம் பெறப்பட்டதாகவும் இந்நிலைமையை அரசாங்கம் சீர்குலைக்க கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் முன்னாள் ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதன் வாக்கு வங்கி சரிந்துவருகின்றது. 

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.

வடக்கில் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில்கூட நடத்தப்பட்டுள்ளது. ஆனால் படையினருக்குரிய கௌரவத்தை இந்த ஆட்சியாளர்கள் வழங்கவில்லை.

நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்வதற்குரிய சூழ்நிலை இருக்கவில்லை. 

எனவே, மக்களை பாதுகாப்பதற்காகவே போர் செய்யப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டது. இந்நிலைமையை அரசாங்கம் சீர்குலைக்க கூடாது.

பொய்களை சமூகமயப்படுத்தியதால் ஏற்படும் பிரதிபலன்களை இந்த அரசாங்கம் விரைவில்  உணரும் எனவும் தெரிவித்தார்.

யுத்தத்தால் கிடைத்த சுதந்திரத்தை தற்போதைய அரசாங்கம் சீர்குலைக்க கூடாது- மொட்டு கட்சி வலியுறுத்து. நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே யுத்தம் இடம்பெற்று சுதந்திரம் பெறப்பட்டதாகவும் இந்நிலைமையை அரசாங்கம் சீர்குலைக்க கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் முன்னாள் ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கருத்து தெரிவிக்கையில்,அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அதன் வாக்கு வங்கி சரிந்துவருகின்றது. முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.வடக்கில் நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில்கூட நடத்தப்பட்டுள்ளது. ஆனால் படையினருக்குரிய கௌரவத்தை இந்த ஆட்சியாளர்கள் வழங்கவில்லை.நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்வதற்குரிய சூழ்நிலை இருக்கவில்லை. எனவே, மக்களை பாதுகாப்பதற்காகவே போர் செய்யப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டது. இந்நிலைமையை அரசாங்கம் சீர்குலைக்க கூடாது.பொய்களை சமூகமயப்படுத்தியதால் ஏற்படும் பிரதிபலன்களை இந்த அரசாங்கம் விரைவில்  உணரும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement