• Nov 05 2026

மாவீரர் நாள் நினைவேந்தல் விவகாரத்தால் வெடித்தது மோதல்! அமளியில் முடிந்த அமர்வு!

Chithra / Nov 5th 2026, 4:00 pm
image


மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய (05) மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் கடும் வாக்குவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.


யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (05.11.2026) மாநகர முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது.


இதன்போது, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி, நல்லூர் ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியார் ஒருவருக்குக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விடயம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


குறித்த காணியை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விவாதத்தின்போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.


கடந்த காலங்களில் குறித்த காணியை வழங்கியபோது ஏற்பட்ட அனுபவங்களையும் படிப்பினைகளையும் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் எவ்வித சர்ச்சைகளும் ஏற்படாத வகையில் இறுக்கமான நிபந்தனைகளை உள்ளடக்கிக் காணியை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டது.


இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் கபிலன், குறித்த காணியை வழங்குவது தொடர்பில் முதலில் சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதே பொருத்தமானது எனத் தெரிவித்தார்.


அதேவேளை, எந்தவொரு அமைப்பினரின் நினைவேந்தலாக இருந்தாலும் அதனை நினைவுகூரும் உரிமையைத் தமது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் காணி குத்தகை விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.


இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்ததால் விவாதம் காரசாரமான வாக்குவாதமாக மாறியது. இதனால் சபையின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களிடையே கூச்சல் குழப்பங்களும் நிலவின. 

மாவீரர் நாள் நினைவேந்தல் விவகாரத்தால் வெடித்தது மோதல் அமளியில் முடிந்த அமர்வு மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் தியாக தீபம் திலீபனின் சிலை தொடர்பான விவகாரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய (05) மாதாந்த அமர்வில் பெரும் சர்ச்சையையும் கடும் வாக்குவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (05.11.2026) மாநகர முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது.இதன்போது, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளுடன் தொடர்புபடுத்தி, நல்லூர் ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியார் ஒருவருக்குக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விடயம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.குறித்த காணியை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விவாதத்தின்போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.கடந்த காலங்களில் குறித்த காணியை வழங்கியபோது ஏற்பட்ட அனுபவங்களையும் படிப்பினைகளையும் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் எவ்வித சர்ச்சைகளும் ஏற்படாத வகையில் இறுக்கமான நிபந்தனைகளை உள்ளடக்கிக் காணியை குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டது.இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் கபிலன், குறித்த காணியை வழங்குவது தொடர்பில் முதலில் சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதே பொருத்தமானது எனத் தெரிவித்தார்.அதேவேளை, எந்தவொரு அமைப்பினரின் நினைவேந்தலாக இருந்தாலும் அதனை நினைவுகூரும் உரிமையைத் தமது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் மற்றும் காணி குத்தகை விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்ததால் விவாதம் காரசாரமான வாக்குவாதமாக மாறியது. இதனால் சபையின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களிடையே கூச்சல் குழப்பங்களும் நிலவின. 

Advertisement

Advertisement

Advertisement