ஹட்டன் - மஸ்கொலியா வழியாக மறேவரை சேவையில் இடம்பெற்று வரும் பேருந்து நாளாந்தம் பழுதடைந்து இடையில் நிறுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக முள்ளு காம் சந்தியில் இருந்து மறேவரை செல்லும் சாலை மிகவும் குறுகியது. அத்துடன் அதிகளவில் வளைவுகள் கொண்ட இந்த சாலை ஒரு புரத்தில் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் ஒரமாக உள்ளது.
தினமும் 10 முறை 210 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த சாலை ஊடாக பழமையான பேருந்தையே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஹட்டன் அரச பேருந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்து மிகவும் பழமையான பேருந்தாகும். அப் பேருந்து நாளாந்தம் பழுதாகி இடை நடுவில் நிறுத்த வேண்டி உள்ளது என அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெரிவித்துள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், பயணிகள் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாரிய அளவில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் மறே நல்லதண்ணி, மஸ்கெலியா நோர்வூட் பகுதியில் உள்ள தமிழ்,சிங்கள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் இந்த பேருந்து சேவையை எதிர் பார்த்துள்ளனர்.
தற்போது சேவையில் ஈடுபட்டு வரும் இந்த பேருந்து மூலம் பாரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் புதிய பேருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,
எமது ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள் பழுது பார்க்கும் நிலையில் உள்ளது. அவற்றை திருத்திய பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் புதிய பேருந்து எமது நிலையத்திற்கு கிடைக்கும் போது வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் இப் பகுதிக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஜனாதிபதி முன் வந்து புதிய பேருந்து வழங்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹட்டன் - மஸ்கொலியா சேவையில் ஈடுபடும் பேருந்து நாளாந்தம் பழுது - அவதியில் மக்கள் ஹட்டன் - மஸ்கொலியா வழியாக மறேவரை சேவையில் இடம்பெற்று வரும் பேருந்து நாளாந்தம் பழுதடைந்து இடையில் நிறுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக முள்ளு காம் சந்தியில் இருந்து மறேவரை செல்லும் சாலை மிகவும் குறுகியது. அத்துடன் அதிகளவில் வளைவுகள் கொண்ட இந்த சாலை ஒரு புரத்தில் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் ஒரமாக உள்ளது.தினமும் 10 முறை 210 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த சாலை ஊடாக பழமையான பேருந்தையே சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஹட்டன் அரச பேருந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்து மிகவும் பழமையான பேருந்தாகும். அப் பேருந்து நாளாந்தம் பழுதாகி இடை நடுவில் நிறுத்த வேண்டி உள்ளது என அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெரிவித்துள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், பயணிகள் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாரிய அளவில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்துடன் மறே நல்லதண்ணி, மஸ்கெலியா நோர்வூட் பகுதியில் உள்ள தமிழ்,சிங்கள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் இந்த பேருந்து சேவையை எதிர் பார்த்துள்ளனர்.தற்போது சேவையில் ஈடுபட்டு வரும் இந்த பேருந்து மூலம் பாரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் புதிய பேருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பில் ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்ட போது அவர் தெரிவிக்கையில், எமது ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள் பழுது பார்க்கும் நிலையில் உள்ளது. அவற்றை திருத்திய பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் புதிய பேருந்து எமது நிலையத்திற்கு கிடைக்கும் போது வழங்க முடியும் என்று தெரிவித்தார்.இதற்கிடையே பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் இப் பகுதிக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஜனாதிபதி முன் வந்து புதிய பேருந்து வழங்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுக்கின்றனர்.