• May 04 2026

கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்

Aathira / Jan 28th 2026, 8:50 pm
image

அநுராதபுரம் - இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம், நேற்று பிற்பகல் நேரத்தில் இடம்பெற்றதாகவும், தகவல் கிடைத்ததையடுத்து இராஜாங்கனை பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் பொலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சடலம் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதால் , இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார்  மேற்கொண்ட ஆரம்பக் கண்காணிப்புகளின் அடிப்படையில், இது கொலைச் சம்பவமா அல்லது உயிர்மாய்ப்பு சம்பவமா என்பதைக் குறித்து இதுவரை உறுதியான முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் அநுராதபுரம் - இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த சம்பவம், நேற்று பிற்பகல் நேரத்தில் இடம்பெற்றதாகவும், தகவல் கிடைத்ததையடுத்து இராஜாங்கனை பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் பொலிஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதால் , இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார்  மேற்கொண்ட ஆரம்பக் கண்காணிப்புகளின் அடிப்படையில், இது கொலைச் சம்பவமா அல்லது உயிர்மாய்ப்பு சம்பவமா என்பதைக் குறித்து இதுவரை உறுதியான முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement