• Aug 12 2025

படகு கவிழ்ந்து தந்தை, மகன் பரிதாப மரணம்; 11 பேர் பத்திரமாக மீட்பு!

Chithra / Aug 12th 2025, 8:13 am
image


பொலன்னறுவை - பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்ததில், 63 வயது தந்தை மற்றும் அவரது 38 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இந்தப் படகு விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததும், உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

படகு கவிழ்ந்ததற்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படகு கவிழ்ந்து தந்தை, மகன் பரிதாப மரணம்; 11 பேர் பத்திரமாக மீட்பு பொலன்னறுவை - பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்ததில், 63 வயது தந்தை மற்றும் அவரது 38 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை இந்தப் படகு விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.படகு கவிழ்ந்ததும், உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததற்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement