• Apr 19 2026

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம்; உடுப்புக்குளம் அலையோசை அணி சம்பியன்!

shanu / Mar 23rd 2026, 6:31 pm
image

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தை உடுப்புக்குளம் அலையோசை அணி தமதாக்கி சம்பியனைத் தட்டித்தூக்கியுள்ளது. 

 


உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் “மண்ணின் மைந்தர்கள்” வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நேற்றையதினம் (22) மாலை உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.


முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகள் பங்கேற்கும் இச்சுற்றுப்போட்டி ஆண்டுதோறும் செம்மலை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டு வருகிறது.


மூன்று மாவீரர்களை தியாகம் செய்த குடும்பத்தை சேர்ந்த மு. நகுலேஸ்வரன் பொதுச்சுடரை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து  வைத்தார். 


விறுவிறுப்பாக ஆரம்பமான இறுதி ஆட்டத்தில் வட்டுவாகல் உதயசூரியன் அணியும், உடுப்புக்குளம் அலையோசை அணியும் மோதிய நிலையில் ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் உடுப்புக்குளம் அலையோசை அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.


போட்டியின் முடிவில், முதலிடம் பெற்ற அணிக்கு 100,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 50,000 ரூபா பணப்பரிசும்

மூன்றாம் இடத்தை பெற்ற அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.


மேலும் சிறந்த அணி, சிறந்த கோல் காப்பாளர், ஆட்டநாயகன், தொடரின் ஆட்டநாயகன், மக்கள் மனம் கவர்ந்த வீரர், சிறந்த நன்னடத்தை வீரர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணம்; உடுப்புக்குளம் அலையோசை அணி சம்பியன் மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தை உடுப்புக்குளம் அலையோசை அணி தமதாக்கி சம்பியனைத் தட்டித்தூக்கியுள்ளது.  உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் “மண்ணின் மைந்தர்கள்” வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நேற்றையதினம் (22) மாலை உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகள் பங்கேற்கும் இச்சுற்றுப்போட்டி ஆண்டுதோறும் செம்மலை உதயசூரியன் விளையாட்டு கழகத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டு வருகிறது.மூன்று மாவீரர்களை தியாகம் செய்த குடும்பத்தை சேர்ந்த மு. நகுலேஸ்வரன் பொதுச்சுடரை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து  வைத்தார். விறுவிறுப்பாக ஆரம்பமான இறுதி ஆட்டத்தில் வட்டுவாகல் உதயசூரியன் அணியும், உடுப்புக்குளம் அலையோசை அணியும் மோதிய நிலையில் ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற கோல் கணக்கில் உடுப்புக்குளம் அலையோசை அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.போட்டியின் முடிவில், முதலிடம் பெற்ற அணிக்கு 100,000 ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 50,000 ரூபா பணப்பரிசும்மூன்றாம் இடத்தை பெற்ற அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.மேலும் சிறந்த அணி, சிறந்த கோல் காப்பாளர், ஆட்டநாயகன், தொடரின் ஆட்டநாயகன், மக்கள் மனம் கவர்ந்த வீரர், சிறந்த நன்னடத்தை வீரர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement