கடற்கரையோரமாக அமைந்திருந்த சட்டவிரோத உணவகக் கட்டடம் மற்றும் கூடுதல் கட்டுமானங்களை அகற்றுவதற்காக இன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்காலிகமாக தோல்வியில் முடிவடைந்துள்ளது.
விகாரை நிர்வாகத்தின் கோரிக்கையினால், மீதமுள்ள கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை
ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரட்ரிக் கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயா வளாகத்திற்குள்,
அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த இந்த உணவகக் கட்டிடம் மற்றும் மூன்று கொட்டில்களை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், குறித்த விகாரையின் விகாராதிபதி, உடைக்கும் நடவடிக்கைக்கு எதிராக துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன், நடவடிக்கைக்காக கால அவகாசமும் கோரியிருந்தார்.
அத்துடன், குறித்த சட்டவிரோத கட்டுமானம் தொடர்பிலான வழக்கு ஒன்று ஏற்கனவே மாநகரசபையினால் தொடரப்பட்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையிலும் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோத உணவகக் கட்டுமானம் அகற்றும் நடவடிக்கை தோல்வியில். கடற்கரையோரமாக அமைந்திருந்த சட்டவிரோத உணவகக் கட்டடம் மற்றும் கூடுதல் கட்டுமானங்களை அகற்றுவதற்காக இன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்காலிகமாக தோல்வியில் முடிவடைந்துள்ளது.விகாரை நிர்வாகத்தின் கோரிக்கையினால், மீதமுள்ள கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பிரட்ரிக் கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயா வளாகத்திற்குள், அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த இந்த உணவகக் கட்டிடம் மற்றும் மூன்று கொட்டில்களை அகற்றுவதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.எனினும், குறித்த விகாரையின் விகாராதிபதி, உடைக்கும் நடவடிக்கைக்கு எதிராக துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன், நடவடிக்கைக்காக கால அவகாசமும் கோரியிருந்தார். அத்துடன், குறித்த சட்டவிரோத கட்டுமானம் தொடர்பிலான வழக்கு ஒன்று ஏற்கனவே மாநகரசபையினால் தொடரப்பட்டுள்ள நிலையில், அதன் தீர்ப்பு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையிலும் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.