• Apr 28 2026

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பதற்றம்; பீதியில் கிளிநொச்சி மக்கள்!

Chithra / Feb 24th 2026, 8:05 am
image



கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்தமையால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.


திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் ஆகிய கிராமப் பகுதிகளுக்குள்ளேயே இந்த யானைகள் புகுந்துள்ளன. 


சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நிலைமைகளை ஆராய்ந்தார்.


யானைகள் நின்ற இடத்திற்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பரீட்சை முடிந்த பின்னர் மாலை வேளையில் யானைகளை விரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மாவட்ட அரச அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார்.


மாலை வேளையில் வனஜீவராசி திணைக்களத்தினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஆவேசமடைந்த யானைகள், அங்கிருந்த இராணுவ முகாமின் வேலிகளை உடைத்துக்கொண்டு முகாமுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களைக் கிராம மக்கள் உபசரிக்க முற்பட்டபோது, அதிகாரிகள் மக்கள் மீது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


தமக்குச் பாதுகாப்பு வழங்க வேண்டிய அதிகாரிகளே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டமை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பதற்றம்; பீதியில் கிளிநொச்சி மக்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்தமையால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.திருவையாறு மற்றும் கனகாம்பிகைக்குளம் ஆகிய கிராமப் பகுதிகளுக்குள்ளேயே இந்த யானைகள் புகுந்துள்ளன. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நிலைமைகளை ஆராய்ந்தார்.யானைகள் நின்ற இடத்திற்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பரீட்சை முடிந்த பின்னர் மாலை வேளையில் யானைகளை விரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மாவட்ட அரச அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார்.மாலை வேளையில் வனஜீவராசி திணைக்களத்தினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது ஆவேசமடைந்த யானைகள், அங்கிருந்த இராணுவ முகாமின் வேலிகளை உடைத்துக்கொண்டு முகாமுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களைக் கிராம மக்கள் உபசரிக்க முற்பட்டபோது, அதிகாரிகள் மக்கள் மீது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், வனஜீவராசி திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமக்குச் பாதுகாப்பு வழங்க வேண்டிய அதிகாரிகளே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டமை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement