கண்டி மாவட்டத்தின் ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் அமைந்துள்ள கைகாவல பாலம் பழுதுபார்ப்பிற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த அறிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டு வரும் பழுது பார்ப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பாலத்தின் அடிப்பகுதியில் கல் தோண்டும் பணி இடம்பெறவுள்ளதால், வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மீமுரேவுக்கான பயணங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பாலத்தின் பழுது நீக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படுவதாகவும், சுமார் 3 நாட்களுக்குள் போக்குவரத்து மீண்டும் இயல்பாகும் எனவும் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீமுரே பயணத்திற்கு தற்காலிகத் தடை கண்டி மாவட்டத்தின் ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் அமைந்துள்ள கைகாவல பாலம் பழுதுபார்ப்பிற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த அறிவித்துள்ளார்.வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டு வரும் பழுது பார்ப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பாலத்தின் அடிப்பகுதியில் கல் தோண்டும் பணி இடம்பெறவுள்ளதால், வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மீமுரேவுக்கான பயணங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.பாலத்தின் பழுது நீக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படுவதாகவும், சுமார் 3 நாட்களுக்குள் போக்குவரத்து மீண்டும் இயல்பாகும் எனவும் பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.