• Dec 11 2024

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்துள்ள தமிழ் அரசியல்வாதிகள்- இன்பராசா ஆதங்கம்..!

Sharmi / Nov 4th 2024, 1:35 pm
image

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் சுயேட்சை-06 யில் பந்து சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

அந்தவகையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையிலான வேட்பாளர்கள்  மூதூர் கூனித்தீவில் இன்று (04) மக்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

ஆயுதப் போராட்டத்தில் ஆயிரக்கான போராளிகளையும் ,பொதுமக்களையும் எமது மக்கள் இழந்துள்ளார்கள்.ஆயுதத் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது கட்சி முதன்முதலாக திருகோணமலையில் தேர்தலில் களம் இறங்கியுள்ளது.

நாம் எமது மக்களுக்காக போராடியவர்கள் நாம் வாக்குக் கேட்கவில்லை.

நீங்கள் எங்களுக்கு வாக்குத்தர வேண்டும்.அதற்குரிய கடமை உங்ளுக்கு உண்டு.

ஏனைய அரசியல்வாதிகள் போன்று எமக்கு பொய் சொல்லி நடிக்கத் தெரியாது எமது மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எமக்குத் தெரியும்.

கஜேந்திரகுமார் உற்பட தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டில் சொத்துக்கள் உள்ளன.எமது போராளிகள் வீதியில் நின்று கஷ்டப்படுகிறார்கள்.

எமது மண்ணுக்காக போராடியவர்கள் நாங்கள் எமது மக்களின் தேவை எமக்கு நன்றாக தெரியுமென தெரிவித்தார்.

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்துள்ள தமிழ் அரசியல்வாதிகள்- இன்பராசா ஆதங்கம். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் சுயேட்சை-06 யில் பந்து சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.அந்தவகையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையிலான வேட்பாளர்கள்  மூதூர் கூனித்தீவில் இன்று (04) மக்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.இதன்பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,ஆயுதப் போராட்டத்தில் ஆயிரக்கான போராளிகளையும் ,பொதுமக்களையும் எமது மக்கள் இழந்துள்ளார்கள்.ஆயுதத் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது கட்சி முதன்முதலாக திருகோணமலையில் தேர்தலில் களம் இறங்கியுள்ளது.நாம் எமது மக்களுக்காக போராடியவர்கள் நாம் வாக்குக் கேட்கவில்லை.நீங்கள் எங்களுக்கு வாக்குத்தர வேண்டும்.அதற்குரிய கடமை உங்ளுக்கு உண்டு.ஏனைய அரசியல்வாதிகள் போன்று எமக்கு பொய் சொல்லி நடிக்கத் தெரியாது எமது மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எமக்குத் தெரியும்.கஜேந்திரகுமார் உற்பட தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டில் சொத்துக்கள் உள்ளன.எமது போராளிகள் வீதியில் நின்று கஷ்டப்படுகிறார்கள்.எமது மண்ணுக்காக போராடியவர்கள் நாங்கள் எமது மக்களின் தேவை எமக்கு நன்றாக தெரியுமென தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement