• Nov 29 2026

ஹிங்குரக்கொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் தவறு; ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் வீண்!

Chithra / Nov 29th 2026, 11:42 am
image


பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலத்தடி தாங்கிக்குள் பெட்ரோல் தவறுதலாக இறக்கப்பட்டதால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று அங்கு சென்ற இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதன்போது, டீசல் தாங்கிக்குள் தவறுதலாக இறக்கப்பட்ட பெட்ரோலை மீண்டும் அதே பவுசரில் ஏற்றி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.


எவ்வாறாயினும், ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் டீசல் தாங்கிக்குள் இறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஹிங்குரக்கொட கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.


குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாக நடவடிக்கைகளைத் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவினரே முன்னெடுத்து வருகின்றனர்.


அவர்களின் நிர்வாகத் திறனின்மை மற்றும் உரிய முறையில் செயற்படாமையே இந்தப் பாரிய நட்டத்திற்குக் காரணம் என முன்னாள் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.


ஹிங்குரக்கொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் தவறு; ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் வீண் பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலத்தடி தாங்கிக்குள் பெட்ரோல் தவறுதலாக இறக்கப்பட்டதால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று அங்கு சென்ற இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதன்போது, டீசல் தாங்கிக்குள் தவறுதலாக இறக்கப்பட்ட பெட்ரோலை மீண்டும் அதே பவுசரில் ஏற்றி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.எவ்வாறாயினும், ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் டீசல் தாங்கிக்குள் இறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஹிங்குரக்கொட கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாக நடவடிக்கைகளைத் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரிகள் குழுவினரே முன்னெடுத்து வருகின்றனர்.அவர்களின் நிர்வாகத் திறனின்மை மற்றும் உரிய முறையில் செயற்படாமையே இந்தப் பாரிய நட்டத்திற்குக் காரணம் என முன்னாள் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement