• Aug 17 2025

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பிலிருந்து வந்த ஆதரவு

Chithra / Aug 17th 2025, 1:48 pm
image

நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு  தமது வர்த்தக நிலையங்களை அடைத்து உதவுமாறு மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர்களின் ஊடக சந்திப்பு இன்று களுவாஞ்சிக்குடி நடைபெற்றது

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக நாளை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானத்திருக்கின்றோம்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர். இருந்தும் முத்தையன்கட்டில் நடைபெற்ற அநீதிக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி கொண்டு வந்த இந்த வட கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு எமது களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களும் பூரண அனுசரையினை தந்தமைக்கு தவிசாளர் என்கின்ற ரீதியில் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம் பெறக்கூடாது தமிழர்களுக்கு எதுவித அநீதியும் இடம்பெறக்கூடாது.

இதுதான் கடைசியாக நடைபெற்ற தமிழரின் உயிரிழப்பாக இருக்க வேண்டும்.  எங்களுடைய நிலைமை அனைத்தும் சர்வதேச அளவுக்கு செல்ல வேண்டும் சர்வதேசம் உண்மையில் எங்களுக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும். என தெரிவித்தார். 

வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பிலிருந்து வந்த ஆதரவு நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு  தமது வர்த்தக நிலையங்களை அடைத்து உதவுமாறு மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை தமிழரசு கட்சியின் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர்களின் ஊடக சந்திப்பு இன்று களுவாஞ்சிக்குடி நடைபெற்றதுஇலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக நாளை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானத்திருக்கின்றோம்.இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர். இருந்தும் முத்தையன்கட்டில் நடைபெற்ற அநீதிக்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி கொண்டு வந்த இந்த வட கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு எமது களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களும் பூரண அனுசரையினை தந்தமைக்கு தவிசாளர் என்கின்ற ரீதியில் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இனிவரும் காலங்களில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம் பெறக்கூடாது தமிழர்களுக்கு எதுவித அநீதியும் இடம்பெறக்கூடாது.இதுதான் கடைசியாக நடைபெற்ற தமிழரின் உயிரிழப்பாக இருக்க வேண்டும்.  எங்களுடைய நிலைமை அனைத்தும் சர்வதேச அளவுக்கு செல்ல வேண்டும் சர்வதேசம் உண்மையில் எங்களுக்கு சரியான தீர்வை பெற்று தர வேண்டும். என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement