• Jun 06 2026

சுவிஸ் முதியவரின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! இருவர் கைது

Aathira / Jun 6th 2026, 11:07 am
image

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இணைந்து இந்த அதிரடி கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடமிருந்து சம்பவத்துடன் தொடர்புடைய சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


சுவிஸ் முதியவரின் கொலை வழக்கில் திடீர் திருப்பம். இருவர் கைது சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இணைந்து இந்த அதிரடி கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடமிருந்து சம்பவத்துடன் தொடர்புடைய சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement