சௌத்பார்- மன்னார் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (15) மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கன்னா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக தமது விசனத்தை தெரிவித்ததோடு,இப்பிரதேச மக்களின் முழுமையான சம்மதம் இன்றி இப்பிரதேசத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தாம் அனுமதிக்க மாட்டோம் என குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குறித்த கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளது.
இதன் போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், கனிய மணல் அகழ்விற்கு மக்களின் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக குறித்த கலந்துரையாடல் திடீர் என ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் மக்களின் கஷ்டங்களை போக்குவதாகவும் அவர்கள் கூறி மக்களை மயக்கி அனுமதி பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.
கனிய மணல் அகழ்வினால் இக்கிராமம் முழுமையாக பாதிக்கப்படும். எமது கிராம கரையோரப்பகுதியில் கனிய மணல் அழ்வுக்காக எங்களிடம் அனுமதி கேட்கின்றனர்.
அனுமதி வழங்கினால் மக்கள் இங்கே வாழ முடியாத நிலை ஏற்படும்.இதனால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இப்பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மன்னாரில் கனிய மணல் அகழ்வு குறித்து திடீர் கலந்துரையாடல்: மக்கள் எதிர்ப்பு சௌத்பார்- மன்னார் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலானது இன்று (15) மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கன்னா தலைமையில் இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக தமது விசனத்தை தெரிவித்ததோடு,இப்பிரதேச மக்களின் முழுமையான சம்மதம் இன்றி இப்பிரதேசத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தாம் அனுமதிக்க மாட்டோம் என குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குறித்த கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளது.இதன் போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், கனிய மணல் அகழ்விற்கு மக்களின் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக குறித்த கலந்துரையாடல் திடீர் என ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் போது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் மக்களின் கஷ்டங்களை போக்குவதாகவும் அவர்கள் கூறி மக்களை மயக்கி அனுமதி பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.கனிய மணல் அகழ்வினால் இக்கிராமம் முழுமையாக பாதிக்கப்படும். எமது கிராம கரையோரப்பகுதியில் கனிய மணல் அழ்வுக்காக எங்களிடம் அனுமதி கேட்கின்றனர்.அனுமதி வழங்கினால் மக்கள் இங்கே வாழ முடியாத நிலை ஏற்படும்.இதனால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே இப்பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.