• May 27 2026

வாகன லீசிங் விதிகளில் திடீர் மாற்றம் – வாகன விலை உயருமா?

Aathira / May 26th 2026, 8:33 am
image

வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் லீசிங் மற்றும் கடன் வசதிகளில் மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், புதிய விதிமுறைகளால் எதிர்காலத்தில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிதி அமைப்பின் நிலைத்தன்மையை பாதுகாக்கவும், கடன் அபாயங்களை கட்டுப்படுத்தவும், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் எல்லைகளை நேற்று (25) முதல் மட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி வெளியான புதிய திருத்தங்களின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட லீசிங் வசதி 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதிய மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி,

வர்த்தக வாகனங்களுக்கான லீசிங் 70% இலிருந்து 60% ஆக குறைப்பு

கார்கள், SUV, வேன், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களுக்கு 50% இலிருந்து 40% ஆக குறைப்பு என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கடன் வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி,

வர்த்தக வாகனங்களுக்கு 90% வரை கடன் வசதி

கார்கள் மற்றும் SUV வகைகளுக்கு 50%

முச்சக்கரவண்டிகளுக்கு 25%

இலகுரக ட்ரக் வண்டிகளுக்கு 90%

மற்ற வாகனங்களுக்கு 70%

என புதிய சதவீதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மின்சார வாகனங்களுக்கு 90% வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும், ஹைபிரிட் SUV மற்றும் கார்கள் போன்றவற்றுக்கு 50% கடன் வசதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றங்களால் பொதுமக்கள் வாகனம் வாங்குவது இன்னும் கடினமாகும் என வாகன சந்தை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.விலைகள்

வாகன லீசிங் விதிகளில் திடீர் மாற்றம் – வாகன விலை உயருமா வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்படும் லீசிங் மற்றும் கடன் வசதிகளில் மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என வாகன இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், புதிய விதிமுறைகளால் எதிர்காலத்தில் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.நிதி அமைப்பின் நிலைத்தன்மையை பாதுகாக்கவும், கடன் அபாயங்களை கட்டுப்படுத்தவும், மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளின் எல்லைகளை நேற்று (25) முதல் மட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி வெளியான புதிய திருத்தங்களின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட லீசிங் வசதி 60 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.அதேபோல், புதிய மற்றும் ஒரு வருடத்திற்கும் குறைவாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.இதன்படி,வர்த்தக வாகனங்களுக்கான லீசிங் 70% இலிருந்து 60% ஆக குறைப்புகார்கள், SUV, வேன், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களுக்கு 50% இலிருந்து 40% ஆக குறைப்பு என மத்திய வங்கி அறிவித்துள்ளது.மேலும், கடந்த ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் இறக்குமதி செய்யப்பட்டு இன்னும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கடன் வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி,வர்த்தக வாகனங்களுக்கு 90% வரை கடன் வசதிகார்கள் மற்றும் SUV வகைகளுக்கு 50%முச்சக்கரவண்டிகளுக்கு 25%இலகுரக ட்ரக் வண்டிகளுக்கு 90%மற்ற வாகனங்களுக்கு 70%என புதிய சதவீதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், மின்சார வாகனங்களுக்கு 90% வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும், ஹைபிரிட் SUV மற்றும் கார்கள் போன்றவற்றுக்கு 50% கடன் வசதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய மாற்றங்களால் பொதுமக்கள் வாகனம் வாங்குவது இன்னும் கடினமாகும் என வாகன சந்தை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.விலைகள்

Advertisement

Advertisement

Advertisement