• Jul 14 2026

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு! கடமையின்போது நேர்ந்த சோகம்

Chithra / Jul 13th 2026, 1:06 pm
image



சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மூதூர் - மஹாவலி கங்கையில்  மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜண் சமீத் ஜிஹான் ரணசிங்க  என தெரியவருகிறது.


மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோது நேற்று (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு குறித்த  பொலிஸ் விசேட அதிரடீப்படையின் சார்ஜண்ட் காணாமல் போயிருந்தார்.


இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பொலிஸ் சார்ஜண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


 கடமையின் போது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர் சடலமாக மீட்பு கடமையின்போது நேர்ந்த சோகம் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மூதூர் - மஹாவலி கங்கையில்  மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜண் சமீத் ஜிஹான் ரணசிங்க  என தெரியவருகிறது.மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோது நேற்று (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு குறித்த  பொலிஸ் விசேட அதிரடீப்படையின் சார்ஜண்ட் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பொலிஸ் சார்ஜண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.   கடமையின் போது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement