• May 24 2025

தேர்தல் சட்டத்தை மீறிய இராஜாங்க அமைச்சர்; ரணிலுக்கு ஆதரவாக நடந்த பிரச்சாரத்தில் குழப்பம்!

Chithra / Sep 9th 2024, 9:39 am
image


தம்புள்ளை நகரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், துண்டுபிரசுரம் விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முற்பட்டபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

பொலிஸார் வந்து இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இராஜாங்க அமைச்சர் மற்றும் குழுவினர் துண்டுபிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த போது, ​​மற்றொரு குழுவினர் வந்து, கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்ததால், சம்பவம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தம்புள்ளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர்,

இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என இராஜாங்க அமைச்சரிடம் கூறினோம். அப்படி செய்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என அறிவித்தோம்.

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். இதுபோன்ற செயல்களை தற்போது அனுமதிக்க முடியாது. எனவே, இப்பணியை உடனடியாக நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அந்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு இராஜாங்க அமைச்சர் வெளியேறினார். பின்னர் அப்பகுதியில் அமைதி நிலவியது” என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டத்தை மீறிய இராஜாங்க அமைச்சர்; ரணிலுக்கு ஆதரவாக நடந்த பிரச்சாரத்தில் குழப்பம் தம்புள்ளை நகரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், துண்டுபிரசுரம் விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முற்பட்டபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.பொலிஸார் வந்து இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.ஜனாதிபதிக்கு ஆதரவாக இராஜாங்க அமைச்சர் மற்றும் குழுவினர் துண்டுபிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்த போது, ​​மற்றொரு குழுவினர் வந்து, கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்ததால், சம்பவம் மேலும் பரபரப்பாகியுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தம்புள்ளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர்,இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என இராஜாங்க அமைச்சரிடம் கூறினோம். அப்படி செய்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என அறிவித்தோம்.சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். இதுபோன்ற செயல்களை தற்போது அனுமதிக்க முடியாது. எனவே, இப்பணியை உடனடியாக நிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.அதன்படி, அந்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு இராஜாங்க அமைச்சர் வெளியேறினார். பின்னர் அப்பகுதியில் அமைதி நிலவியது” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now