• May 23 2026

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சரின் முக்கிய அறிவிப்பு.!

Chithra / Feb 18th 2024, 10:17 am
image

 

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெற வேண்டுமானால் தகுதியுடைய அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்காத எவருக்கும் நலன்புரி நன்மைகள்   கிடைக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும முதல் கட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பாத மற்றும் குடும்பங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஆனால் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத அனைவரும் இரண்டாவது கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். என தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சரின் முக்கிய அறிவிப்பு.  குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் தகுதியுடைய அனைவருக்கும் வெளியாரின் தலையீடுகள் இன்றி நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெற வேண்டுமானால் தகுதியுடைய அனைவரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு விண்ணப்பிக்காத எவருக்கும் நலன்புரி நன்மைகள்   கிடைக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அஸ்வெசும முதல் கட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பாத மற்றும் குடும்பங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த ஆனால் வீட்டுத் தகவல் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத அனைவரும் இரண்டாவது கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement