• Nov 22 2025

நாகர்கோவிலில் இடைநடுவில் பழுதடைந்த அரச பேருந்து; உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அவதி

Chithra / Nov 22nd 2025, 9:42 am
image


யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து பருத்தித்துறை நோக்கி இன்று காலை  6 மணிக்கு புறப்பட்ட அரச பேருந்து பழுதடைந்ததால் மாணவர்கள் உட்பட பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


உயர்தர பரீட்சை எழுதும்  மாணவர்களுடன் சென்ற குறித்த பேருந்து ஏழு மணி அளவில் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ளது. 


இதனால், பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், அரச அதிகாரிகள், ஏனைய தொழில் துறைகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் இடை நடுவில் தவித்துள்ளனர். 


யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் அரச பேருந்துகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதால் உடனடியாக புதிய பேருந்தை  தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதும் மக்களின் கோரிக்கைக்கு இதுவரை உரியவர்கள் செவி சாய்க்கவில்லை என மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.


பழுதடைந்த அரச பேருந்துகளால் அவதிப்படும் வடமராட்சி கிழக்கு மக்களின் அவசர கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடன் தீர்த்துத்தருமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


நாகர்கோவிலில் இடைநடுவில் பழுதடைந்த அரச பேருந்து; உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அவதி யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து பருத்தித்துறை நோக்கி இன்று காலை  6 மணிக்கு புறப்பட்ட அரச பேருந்து பழுதடைந்ததால் மாணவர்கள் உட்பட பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உயர்தர பரீட்சை எழுதும்  மாணவர்களுடன் சென்ற குறித்த பேருந்து ஏழு மணி அளவில் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ளது. இதனால், பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், அரச அதிகாரிகள், ஏனைய தொழில் துறைகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் இடை நடுவில் தவித்துள்ளனர். யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் அரச பேருந்துகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதால் உடனடியாக புதிய பேருந்தை  தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதும் மக்களின் கோரிக்கைக்கு இதுவரை உரியவர்கள் செவி சாய்க்கவில்லை என மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.பழுதடைந்த அரச பேருந்துகளால் அவதிப்படும் வடமராட்சி கிழக்கு மக்களின் அவசர கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடன் தீர்த்துத்தருமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement