• Oct 14 2026

தாக்குதல் அச்சத்தால் விமானங்களை ரத்து செய்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - நடந்தது என்ன?

Chithra / Oct 9th 2026, 10:20 am
image


சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமானப் பயணங்களைத் நாளை (10) வரை ரத்து செய்துள்ளது.


பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 விமானமும், இன்று அதிகாலை ரியாத்திலிருந்து கொழும்பு திரும்பவிருந்த UL 266 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் அச்சத்தால் விமானங்களை ரத்து செய்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - நடந்தது என்ன சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமானப் பயணங்களைத் நாளை (10) வரை ரத்து செய்துள்ளது.பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 விமானமும், இன்று அதிகாலை ரியாத்திலிருந்து கொழும்பு திரும்பவிருந்த UL 266 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement