• Jul 16 2025

சவுதி அரேபியாவுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இலங்கை!

Chithra / Jul 15th 2025, 9:41 am
image

 

சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

இது நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், SFD ஆல் வழங்கப்பட்ட கடன்கள் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டன.

இது இலங்கையின் ஒட்டுமொத்த கடன் சுமைக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்குகிறது.

இருதரப்பு திருத்த கடன் ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷனா சூரியப்பெரும, இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

சவுதி அரேபியாவின் சார்பாக சவுதி மேம்பாட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் ஏ. அல்மர்ஷாத் கையெழுத்திட்டார்.

இந்த கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களின் வெற்றிகரமான முடிவு, சவுதி அரேபியா இராச்சியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


சவுதி அரேபியாவுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இலங்கை  சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.இது நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும், SFD ஆல் வழங்கப்பட்ட கடன்கள் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டன.இது இலங்கையின் ஒட்டுமொத்த கடன் சுமைக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்குகிறது.இருதரப்பு திருத்த கடன் ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷனா சூரியப்பெரும, இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.சவுதி அரேபியாவின் சார்பாக சவுதி மேம்பாட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் ஏ. அல்மர்ஷாத் கையெழுத்திட்டார்.இந்த கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களின் வெற்றிகரமான முடிவு, சவுதி அரேபியா இராச்சியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement