• Mar 28 2026

ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை

Aathira / Mar 28th 2026, 10:10 am
image

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை, உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

யூரியா, பொட்டாசியம், அம்மோனியா மற்றும் போஸ்பேட் போன்ற உலகளாவிய விவசாய உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்படுவதால், உரத் தட்டுப்பாடு காரணமாக ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜெர்மனியில் உள்ள கீல் ஆராய்ச்சி நிறுவனம், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால்,உலகளாவிய கோதுமை விலைகள் 4.2 சதவீதம் வரையிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2 சதவீதம் வரையிலும் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடுகிறது.

கீல் நிறுவனத்தின் தரவுகளுக்கெமைய, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், பொருட்களின் விலைகள் மிக அதிகமாக அதிகரிக்கக்கூடிய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் ஒட்டுமொத்த உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகள் ஜாம்பியா 30.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், இலங்கை 15.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், தாய்வான் 12.5 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 11.4 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

ஹோர்முஸ் நெருக்கடியால் உலகில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறிய இலங்கை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை, உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.யூரியா, பொட்டாசியம், அம்மோனியா மற்றும் போஸ்பேட் போன்ற உலகளாவிய விவசாய உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பெரும்போக செய்கை மேற்கொள்ளப்படுவதால், உரத் தட்டுப்பாடு காரணமாக ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், ஜெர்மனியில் உள்ள கீல் ஆராய்ச்சி நிறுவனம், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால்,உலகளாவிய கோதுமை விலைகள் 4.2 சதவீதம் வரையிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2 சதவீதம் வரையிலும் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடுகிறது.கீல் நிறுவனத்தின் தரவுகளுக்கெமைய, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், பொருட்களின் விலைகள் மிக அதிகமாக அதிகரிக்கக்கூடிய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் ஒட்டுமொத்த உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகள் ஜாம்பியா 30.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், இலங்கை 15.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், தாய்வான் 12.5 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும் மற்றும் பாகிஸ்தான் 11.4 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement