• Oct 04 2026

நினைவேந்தல் நிகழ்வில் சுடரேற்றிய மாணவர்களையே விசாரணைக்கு அழைப்பதா? – சிறீதரன் எம்.பி. கொந்தளிப்பு

Chithra / Oct 4th 2026, 3:47 pm
image


பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளில் சுடரேற்றிய பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாகவும் சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.


கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில், ஆனந்தபுரம் வட்டார கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் இன்று (04) நடைபெற்ற மக்கள் சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.


இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், 

 

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொடூரமான சட்டம் எனக் குறிப்பிட்டார்.


தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டிருந்த போதிலும், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதுவரை அந்தச் சட்டம் நீக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், அரசியல் தீர்வு தொடர்பிலும் அரசாங்கம் அமைதி காத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.


கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டார்.


அதன்படி, பொலிஸாருக்கு மாத்திரமன்றி இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும், விசாரணையின்றி தடுப்பில் வைப்பதற்கும் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளில் சுடரேற்றிய பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாகவும் சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.


சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், அதைவிடக் கடுமையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பது வஞ்சகமான செயற்பாடு எனவும் அவர் விமர்சித்தார்.


புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமது முழுமையான எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நினைவேந்தல் நிகழ்வில் சுடரேற்றிய மாணவர்களையே விசாரணைக்கு அழைப்பதா – சிறீதரன் எம்.பி. கொந்தளிப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளில் சுடரேற்றிய பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாகவும் சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில், ஆனந்தபுரம் வட்டார கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் இன்று (04) நடைபெற்ற மக்கள் சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு, அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொடூரமான சட்டம் எனக் குறிப்பிட்டார்.தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டிருந்த போதிலும், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதுவரை அந்தச் சட்டம் நீக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், அரசியல் தீர்வு தொடர்பிலும் அரசாங்கம் அமைதி காத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டார்.அதன்படி, பொலிஸாருக்கு மாத்திரமன்றி இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கும், விசாரணையின்றி தடுப்பில் வைப்பதற்கும் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகளில் சுடரேற்றிய பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதாகவும் சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், அதைவிடக் கடுமையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பது வஞ்சகமான செயற்பாடு எனவும் அவர் விமர்சித்தார்.புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமது முழுமையான எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement