• Apr 26 2026

யாழ்.மாநகர முதல்வர் தலைமையில் யாழில் விசேட திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டம்!

shanu / Feb 28th 2026, 6:02 pm
image

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட குடியிருப்புகளற்ற பல்வேறு தனியார் வெற்றுக் காணிகள், வீதி ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் பலரும் சமூகப் பொறுப்பற்ற வகையில் தமது வீட்டு திண்மக்கழிவுகளை எழுந்தமானமாக வீசுவதும், இதனால் பொது இடங்கள் மிகுந்த துர்நாற்றத்துடன் காணப்படுவதும், அவ் வீதியூடான போக்குவரத்தின் போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதையும் அண்மைக்காலமாக அவதானிக்க முடிந்தது.


இந் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் மேற்படி இடங்களில் வீசப்பட்டுள்ள திண்மக்கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாநகர முதல்வர் திருமதி வி.மதிவதனி அவர்களின் தலைமையில் மாநகர சுகாதாரக் குழு தலைவர் கௌரவ எஸ்.சாரூபன் அவர்களின் வழிநடாத்தில் சுகாதாரக் குழுவினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் மாநகரில் பொது இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக சுகாதாரக் குழு தலைவர் சாரூபன் தலைமையிலான குழுவின் கீழ் ஐந்து சுகாதார ஊழியர்கள், உழவு இயந்திரம் மற்றும் ஜே.சி.பி இயந்திரம் உள்ளடங்களான ஆளணி மற்றும் வாகன வளங்கள் விசேடமாக வழங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.


முதல்வர் தலைமையில் மாநகரில் முன்னெடுக்கப்படும் இவ் விசேட திண்மக்கழிவகற்றல் வேலைத்திட்டத்தை நேற்று (27) முதல்வர் வி.மதிவதனி அவர்கள் நாயன்மார்க்குளப் பகுதி, மற்றும் குளத்திற்கான பிரதான வீதி அருகாமையில் உள்ள வெற்றிக்காணியில் போடப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டமாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். முதல்வரின் இவ் விசேட நடவடிக்கையினால் பொது வெளியில் கழிவுகளை வீசுபவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன், இத் திட்டம் முதல் நாளிலேயே மாநகர மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


அண்மைக்காலமாகவே மாநகரில் திட்டமிட்ட வகையில் ஒருசிலரால் மாநகரசபையின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் முகமாக தமது வீட்டுக் கழிவுகளை வீதிகளில் வீசும் செயற்பாடுகளும், மாநகர சபைக்கு அண்மைய உள்;ராட்சி சபைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதனால் அப் பிரதேச மக்கள் தமது வீட்டுக் கழிவுகளை யாழ் நகருக்குள் வரும் போது மாநகர எல்லைக்குள் வீதிகள், பொது இடங்களில் வீசிச் செல்லும் நடவடிக்கைகளும் மாநகர அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மாநகரசபையினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள முறைமைகளான பிரட்டு அலுவலகங்கள் மற்றும் மாநகர குப்பை காவும் வாகனங்களில் வீட்டுத் திண்மக்கழிவுகளை வழங்காமல் வீதிகளில் வீட்டுக் கழிவுகளை வீசுபவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முதல்வர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


மேற்படி நிகழ்வில் மாநகர சுகாதாரக் குழு தலைவர் எஸ்.சாரூபன், சுகாதாரக் குழு கௌரவ உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


யாழ்.மாநகர முதல்வர் தலைமையில் யாழில் விசேட திண்மக்கழிவகற்றல் செயற்றிட்டம் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட குடியிருப்புகளற்ற பல்வேறு தனியார் வெற்றுக் காணிகள், வீதி ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் பலரும் சமூகப் பொறுப்பற்ற வகையில் தமது வீட்டு திண்மக்கழிவுகளை எழுந்தமானமாக வீசுவதும், இதனால் பொது இடங்கள் மிகுந்த துர்நாற்றத்துடன் காணப்படுவதும், அவ் வீதியூடான போக்குவரத்தின் போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதையும் அண்மைக்காலமாக அவதானிக்க முடிந்தது.இந் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் மேற்படி இடங்களில் வீசப்பட்டுள்ள திண்மக்கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாநகர முதல்வர் திருமதி வி.மதிவதனி அவர்களின் தலைமையில் மாநகர சுகாதாரக் குழு தலைவர் கௌரவ எஸ்.சாரூபன் அவர்களின் வழிநடாத்தில் சுகாதாரக் குழுவினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் மாநகரில் பொது இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக சுகாதாரக் குழு தலைவர் சாரூபன் தலைமையிலான குழுவின் கீழ் ஐந்து சுகாதார ஊழியர்கள், உழவு இயந்திரம் மற்றும் ஜே.சி.பி இயந்திரம் உள்ளடங்களான ஆளணி மற்றும் வாகன வளங்கள் விசேடமாக வழங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.முதல்வர் தலைமையில் மாநகரில் முன்னெடுக்கப்படும் இவ் விசேட திண்மக்கழிவகற்றல் வேலைத்திட்டத்தை நேற்று (27) முதல்வர் வி.மதிவதனி அவர்கள் நாயன்மார்க்குளப் பகுதி, மற்றும் குளத்திற்கான பிரதான வீதி அருகாமையில் உள்ள வெற்றிக்காணியில் போடப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டமாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். முதல்வரின் இவ் விசேட நடவடிக்கையினால் பொது வெளியில் கழிவுகளை வீசுபவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதுடன், இத் திட்டம் முதல் நாளிலேயே மாநகர மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.அண்மைக்காலமாகவே மாநகரில் திட்டமிட்ட வகையில் ஒருசிலரால் மாநகரசபையின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் முகமாக தமது வீட்டுக் கழிவுகளை வீதிகளில் வீசும் செயற்பாடுகளும், மாநகர சபைக்கு அண்மைய உள்;ராட்சி சபைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதனால் அப் பிரதேச மக்கள் தமது வீட்டுக் கழிவுகளை யாழ் நகருக்குள் வரும் போது மாநகர எல்லைக்குள் வீதிகள், பொது இடங்களில் வீசிச் செல்லும் நடவடிக்கைகளும் மாநகர அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மாநகரசபையினால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள முறைமைகளான பிரட்டு அலுவலகங்கள் மற்றும் மாநகர குப்பை காவும் வாகனங்களில் வீட்டுத் திண்மக்கழிவுகளை வழங்காமல் வீதிகளில் வீட்டுக் கழிவுகளை வீசுபவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முதல்வர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.மேற்படி நிகழ்வில் மாநகர சுகாதாரக் குழு தலைவர் எஸ்.சாரூபன், சுகாதாரக் குழு கௌரவ உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement