நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
கொழும்புக்கு வெளியிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் 400 மீற்றர் ஓடுதளப் பாதைகள் இல்லாமையை நிவர்த்தி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
இதற்கமைய, சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்பட்ட வகையில் இந்த மைதானங்கள் வடிவமைக்கப்படவுள்ளன.
இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தேசிய பாடசாலை, மூன்று மாகாணப் பாடசாலைகள் என்ற அடிப்படையில் பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளன.
விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், மைதானங்களுக்குத் தேவையான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு வசதிகளும் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பாடசாலை மைதானங்களை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.கொழும்புக்கு வெளியிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் 400 மீற்றர் ஓடுதளப் பாதைகள் இல்லாமையை நிவர்த்தி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.இதற்கமைய, சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்பட்ட வகையில் இந்த மைதானங்கள் வடிவமைக்கப்படவுள்ளன.இந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தேசிய பாடசாலை, மூன்று மாகாணப் பாடசாலைகள் என்ற அடிப்படையில் பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளன.விளையாட்டு அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், மைதானங்களுக்குத் தேவையான முறையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு வசதிகளும் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.