• May 28 2026

வெசாக் தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு - விசேட கண்காணிப்பு நடவடிக்கை

Chithra / May 28th 2026, 2:02 pm
image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறுகையில், தன்சல்களை பதிவு செய்வதற்குத் தொடர்ந்து சந்தர்ப்பம் உள்ளதாகத் தெரிவித்தார். 


குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று நோய்கள் சில பரவி வருவதால், தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


இதற்கிடையில், வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள், கூடுகள் மற்றும் வெசாக் வலயங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பௌத்த மக்கள் தயாராகி வருவதுடன், தமது வீடுகளை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரங்களால் அழகுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். 


முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இம்முறை வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரப் பொருட்களின் விலைகள் சற்றே அதிகரித்துள்ள போதிலும், விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மே 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 464 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர் டெஹான் வித்தானகே தெரிவித்துள்ளார்.


பதிவு செய்யப்பட்டுள்ள இந்த தானசாலைகளில், 91 தானசாலைகள் சோறு விநியோகிக்கும் தானசாலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள பொது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே இந்தத் தானசாலைகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொதுமக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தானசாலைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பொது சுகாதார அதிகாரிகளினால் விசேட சோதனைகள் நடத்தப்படவுள்ளன.


இதன்படி தானசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரான தயாரிப்புப் பணிகள் ,தானசாலைகள் நடைபெறும் காலப்பகுதி,தானசாலைகள் நிறைவடைந்த பின்னரான துப்பரவுப் பணிகள் ஆகிய மூன்று கட்டங்களிலும் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பரிசோதகர்களினால் கடுமையான கள ஆய்வுகளும் கண்காணிப்புகளும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


வெசாக் தன்சல் வழங்குவோருக்கான விசேட அறிவிப்பு - விசேட கண்காணிப்பு நடவடிக்கை வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறுகையில், தன்சல்களை பதிவு செய்வதற்குத் தொடர்ந்து சந்தர்ப்பம் உள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று நோய்கள் சில பரவி வருவதால், தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில், வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள், கூடுகள் மற்றும் வெசாக் வலயங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பௌத்த மக்கள் தயாராகி வருவதுடன், தமது வீடுகளை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரங்களால் அழகுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இம்முறை வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரப் பொருட்களின் விலைகள் சற்றே அதிகரித்துள்ள போதிலும், விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மே 27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 464 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம பொது சுகாதார பரிசோதகர் டெஹான் வித்தானகே தெரிவித்துள்ளார்.பதிவு செய்யப்பட்டுள்ள இந்த தானசாலைகளில், 91 தானசாலைகள் சோறு விநியோகிக்கும் தானசாலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள பொது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கவே இந்தத் தானசாலைகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தானசாலைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பொது சுகாதார அதிகாரிகளினால் விசேட சோதனைகள் நடத்தப்படவுள்ளன.இதன்படி தானசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரான தயாரிப்புப் பணிகள் ,தானசாலைகள் நடைபெறும் காலப்பகுதி,தானசாலைகள் நிறைவடைந்த பின்னரான துப்பரவுப் பணிகள் ஆகிய மூன்று கட்டங்களிலும் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பரிசோதகர்களினால் கடுமையான கள ஆய்வுகளும் கண்காணிப்புகளும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement