முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, மருத்துவமனைக்கான ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக பெறப்பட்ட நிதி சிரிலிய சவிய அமைப்பின் கணக்கில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதீப் காரியவசத்திடம் முன்னதாகவும் விசாரணை நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விசாரணையுடன் தொடர்புடையதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரிலிய சவிய அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதீப் காரியவசத்தின் கைது அந்த விசாரணையில் இடம்பெற்றுள்ள அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது.
ஷிராந்தி ராஜபக்ஷவை தொடர்ந்து மற்றொரு முக்கிய கைது - ஒரே விசாரணையில் அடுத்தடுத்து அதிரடி முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, மருத்துவமனைக்கான ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக பெறப்பட்ட நிதி சிரிலிய சவிய அமைப்பின் கணக்கில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பில் பிரதீப் காரியவசத்திடம் முன்னதாகவும் விசாரணை நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த விசாரணையுடன் தொடர்புடையதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.சிரிலிய சவிய அமைப்பின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரதீப் காரியவசத்தின் கைது அந்த விசாரணையில் இடம்பெற்றுள்ள அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது.