• Oct 28 2026

வெள்ளத்தால் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Chithra / Oct 27th 2026, 10:48 am
image


இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


அதன்படி, சப்ரகமுவ மாகாணத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு, அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளில் தோற்ற முடியாத மாணவர்களுக்கு இந்த விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வெள்ள நிலைமை சீரடைந்த பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்குச் சென்று அறிவிப்பதன் மூலம் புதிய பரீட்சைத் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பரீட்சை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் வெள்ளப்பெருக்கினால் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களும் தங்களது செயன்முறைப் பரீட்சைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

வெள்ளத்தால் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதன்படி, சப்ரகமுவ மாகாணத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு, அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளில் தோற்ற முடியாத மாணவர்களுக்கு இந்த விசேட ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.வெள்ள நிலைமை சீரடைந்த பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையங்களுக்குச் சென்று அறிவிப்பதன் மூலம் புதிய பரீட்சைத் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பரீட்சை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வெள்ளப்பெருக்கினால் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களும் தங்களது செயன்முறைப் பரீட்சைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement