• Apr 14 2026

O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

Aathira / Feb 16th 2026, 12:46 pm
image

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ள நிலையில், 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 4,51,463 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

இதனை முன்னிட்டு, மாணவர்கள் இன்று மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், நித்திரையை தவிர்த்து படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், புதிய பாடங்களை கற்க முயலாமல், ஏற்கனவே படித்தவற்றை மீட்டுப்படித்தல் போதுமானது. 

பரீட்சைத் தாளைப் பெற்றவுடன் முதல் 5 நிமிடங்களில் உடனடியாக விடையளிக்க முயற்சிக்காமல், பதிலுக்கு எளிய வினாவை தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பரீட்சை நேர அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட கால அட்டவணையை மட்டுமே பின்பற்றுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு நேரத்திற்கு முன்பாக வருகை தர வேண்டும் என்றும், அடையாள ஆவணங்கள் மற்றும் பரீட்சை அனுமதிப்பத்திரம் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும்,

கைத்தொலைபேசிகள், Bluetooth சாதனங்கள், Smart Watch-கள், குறிப்புக்கள் அல்லது ஆவணங்கள் மண்டபத்திற்கு கொண்டு செல்லக் கூடாது. 

வினாத்தாளில் பிழை திருத்த Tipp-Ex பயன்படுத்தக் கூடாது. பிழைகளை கோட்டிட்டு மறுபடியும் எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ள நிலையில், 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 4,51,463 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.இதனை முன்னிட்டு, மாணவர்கள் இன்று மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், நித்திரையை தவிர்த்து படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச அறிவுறுத்தியுள்ளார். மேலும், புதிய பாடங்களை கற்க முயலாமல், ஏற்கனவே படித்தவற்றை மீட்டுப்படித்தல் போதுமானது. பரீட்சைத் தாளைப் பெற்றவுடன் முதல் 5 நிமிடங்களில் உடனடியாக விடையளிக்க முயற்சிக்காமல், பதிலுக்கு எளிய வினாவை தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், பரீட்சை நேர அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட கால அட்டவணையை மட்டுமே பின்பற்றுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு நேரத்திற்கு முன்பாக வருகை தர வேண்டும் என்றும், அடையாள ஆவணங்கள் மற்றும் பரீட்சை அனுமதிப்பத்திரம் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும்,கைத்தொலைபேசிகள், Bluetooth சாதனங்கள், Smart Watch-கள், குறிப்புக்கள் அல்லது ஆவணங்கள் மண்டபத்திற்கு கொண்டு செல்லக் கூடாது. வினாத்தாளில் பிழை திருத்த Tipp-Ex பயன்படுத்தக் கூடாது. பிழைகளை கோட்டிட்டு மறுபடியும் எழுத வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement