பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு சட்ட மா அதிபரினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதம் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்நிலையிலேயே, பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ளாதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்த ஆய்வுக்காக விசேட குழு நியமனம் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு சட்ட மா அதிபரினால் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதம் அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்நிலையிலேயே, பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இந்நிலையில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை சட்டமா அதிபர் நியமித்துள்ளாதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.