• Mar 26 2026

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

Chithra / Mar 25th 2026, 7:39 am
image

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.


இதனையடுத்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.


இந்த நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று (26) நேரடியாக வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.


தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மார்ச் 26ஆம் திகதி முதல் தத்தமது வங்கி கணக்குகளின் ஊடாக 'அஸ்வெசும' நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.இதனையடுத்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.இந்த நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று (26) நேரடியாக வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மார்ச் 26ஆம் திகதி முதல் தத்தமது வங்கி கணக்குகளின் ஊடாக 'அஸ்வெசும' நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement