• Aug 19 2025

பல வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த மகன்; கண்ணீரால் நனைந்த குடும்பம்- மனதை நெகிழ வைக்கும் காணொளி!

shanuja / Aug 19th 2025, 2:41 pm
image

குடும்பத்திலிருந்து வெளியேறிய மகன் ஒருவர் 8 வருடங்களிற்குப் பின்னர் பெற்றோருடன் இணைந்த தருணம் மனதை நெகிழ வைத்துள்ளது. 


இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. 


கடந்த 2007 ஆம் ஆண்டு தனது 16 வயதில் மகன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர் அவர் எங்குள்ளார், என்ன செய்கின்றார்,அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் கிடைக்காததால் பெற்றோர்கள் பதறி பரிதவித்து இருந்துள்ளனர். 


அதன்பின்னர் பொலிஸ் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று முறைப்பாடு பதிவு செய்தனர். 


முறைப்பாட்டையடுத்து அவரைத் தேடும் பணிகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தி வந்தனர். பொலிஸாரின் தீவிர தேடுதலில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


கடந்த 8 வருடங்களிற்குப் பின்னர் அவர் தனது பெற்றோரிடம் இணைந்த நொடி மனித நெகிழ வைத்துள்ளது. 


மகனைப் பார்த்த பெற்றோர் அவரைக் கட்டித் தழுவி தங்களது அன்பைக் கண்ணீரால் வெளிப்படுத்தியுள்ளனர். 


மகனும் தாய் தந்தையர் உறவினர்களைப் பார்த்த உச்சக் கட்ட மகிழ்ச்சியை கண்ணீரால் நனைத்துள்ளார். 


8 வருடங்களின் பின்னர் தனது பெற்றோரையும் பெற்றோர் தங்களது மகனையும் பார்த்து கண்ணீரில் நனையும் குடும்பத்தைப் பார்த்த பொலிஸ் அலுவலர்களும் தங்களது மகிழ்ச்சியைக் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளனர். 


மகனும் பெற்றோரும் இணைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

பல வருடங்களுக்கு பின் பெற்றோருடன் இணைந்த மகன்; கண்ணீரால் நனைந்த குடும்பம்- மனதை நெகிழ வைக்கும் காணொளி குடும்பத்திலிருந்து வெளியேறிய மகன் ஒருவர் 8 வருடங்களிற்குப் பின்னர் பெற்றோருடன் இணைந்த தருணம் மனதை நெகிழ வைத்துள்ளது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு தனது 16 வயதில் மகன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின்னர் அவர் எங்குள்ளார், என்ன செய்கின்றார்,அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் கிடைக்காததால் பெற்றோர்கள் பதறி பரிதவித்து இருந்துள்ளனர். அதன்பின்னர் பொலிஸ் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டையடுத்து அவரைத் தேடும் பணிகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தி வந்தனர். பொலிஸாரின் தீவிர தேடுதலில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 8 வருடங்களிற்குப் பின்னர் அவர் தனது பெற்றோரிடம் இணைந்த நொடி மனித நெகிழ வைத்துள்ளது. மகனைப் பார்த்த பெற்றோர் அவரைக் கட்டித் தழுவி தங்களது அன்பைக் கண்ணீரால் வெளிப்படுத்தியுள்ளனர். மகனும் தாய் தந்தையர் உறவினர்களைப் பார்த்த உச்சக் கட்ட மகிழ்ச்சியை கண்ணீரால் நனைத்துள்ளார். 8 வருடங்களின் பின்னர் தனது பெற்றோரையும் பெற்றோர் தங்களது மகனையும் பார்த்து கண்ணீரில் நனையும் குடும்பத்தைப் பார்த்த பொலிஸ் அலுவலர்களும் தங்களது மகிழ்ச்சியைக் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளனர். மகனும் பெற்றோரும் இணைந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement