ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நவீன காலத்திலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை
பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்கள், மோசமான உணர்ச்சி் கட்டுப்பாடு, குறைந்த சுய மதிப்பு மற்றும் யதார்த்தத்திலிருந்து விலகல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
13 வயதிற்கு முன் ஒருவர் ஸ்மார்ட்போன் வாங்கிய ஒவ்வொரு வருடத்திற்கும், அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறைவாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திய குழந்தைகள், மற்றும் சிறவர்கள் சமூக ஊடகங்களை அதிகமாக அணுகியதாலும், தூக்கக் கோளாறுகள், சைபர்புல்லிங் மற்றும் எதிர்மறை குடும்ப உறவுகளை அனுபவித்ததாலும் இது நிகழ வாய்ப்புள்ளது என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
163 நாடுகளில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் சுய அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தரவு அமைந்துள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பாவனைகள் சிறுவர்களிடையே அதிகரிப்பு; பெற்றோருக்கு எச்சரிக்கை ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நவீன காலத்திலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். 13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்கள், மோசமான உணர்ச்சி் கட்டுப்பாடு, குறைந்த சுய மதிப்பு மற்றும் யதார்த்தத்திலிருந்து விலகல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. 13 வயதிற்கு முன் ஒருவர் ஸ்மார்ட்போன் வாங்கிய ஒவ்வொரு வருடத்திற்கும், அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறைவாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.13 வயதிற்கு முன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்திய குழந்தைகள், மற்றும் சிறவர்கள் சமூக ஊடகங்களை அதிகமாக அணுகியதாலும், தூக்கக் கோளாறுகள், சைபர்புல்லிங் மற்றும் எதிர்மறை குடும்ப உறவுகளை அனுபவித்ததாலும் இது நிகழ வாய்ப்புள்ளது என்று ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. 163 நாடுகளில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் சுய அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தரவு அமைந்துள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.