ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
மேற்படி ஜனாதிபதி செயலகத்தில் விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி நேற்று (22) பிற்பகல் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் என்பவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடைபெறாததால், இந்த நிறுவனங்கள் பாரியளவில் செயலிழந்துவிட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து துரிதமாக விசாரணையை நடத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கவும் அவர் குழுவுக்கு அறிவித்தார்.
இந்த விசேட விசாரணைக் குழுவிற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
விமான சேவைகளில் நடந்த ஊழல், முறைகேடுகளை விசாரிக்க விசேட குழு நியமனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.மேற்படி ஜனாதிபதி செயலகத்தில் விசேட விசாரணைக் குழுவை ஜனாதிபதி நேற்று (22) பிற்பகல் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.அதன்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் என்பவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடைபெறாததால், இந்த நிறுவனங்கள் பாரியளவில் செயலிழந்துவிட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து துரிதமாக விசாரணையை நடத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கவும் அவர் குழுவுக்கு அறிவித்தார்.இந்த விசேட விசாரணைக் குழுவிற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.