• Apr 15 2026

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகி சகோதரி பலி; வவுனியாவில் பயங்கரம்

Chithra / Apr 9th 2026, 9:02 am
image

வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். 


இச் சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது. 


செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  


குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.


இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.  


குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 


சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகி சகோதரி பலி; வவுனியாவில் பயங்கரம் வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது. செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.  குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement