"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புத்தகங்களை எழுதினாலும் உண்மைகளை மூடிமறைக்க முடியாது.
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பாக நடைபெற்று வரும் சமயங்களில் எல்லாம் கம்மன்பில கலக்கமடைகின்றார்.
எனவே, பிரதான சூத்திரதாரி எங்கே இருக்கின்றார் என்பது குறித்தும், இதன் பின்புலம் என்னவென்பது தொடர்பிலும் வினா எழுகின்றது.
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டபோதும் உதய கம்மன்பில உள்ளிட்டவர்களே அதிகம் குழப்பம் அடைந்தார்கள்.
நீதிமன்றம் ஊடாக நீதி கிடைக்கும். அதற்கான சட்ட நடவடிக்கை உரிய வகையில் இடம்பெறும்." - என்றார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடக்கும்போது கம்மன்பில கலக்கமடைவது ஏன் விஜித ஹேரத் கேள்வி "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புத்தகங்களை எழுதினாலும் உண்மைகளை மூடிமறைக்க முடியாது.மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பாக நடைபெற்று வரும் சமயங்களில் எல்லாம் கம்மன்பில கலக்கமடைகின்றார்.எனவே, பிரதான சூத்திரதாரி எங்கே இருக்கின்றார் என்பது குறித்தும், இதன் பின்புலம் என்னவென்பது தொடர்பிலும் வினா எழுகின்றது.சுரேஷ் சலே கைது செய்யப்பட்டபோதும் உதய கம்மன்பில உள்ளிட்டவர்களே அதிகம் குழப்பம் அடைந்தார்கள்.நீதிமன்றம் ஊடாக நீதி கிடைக்கும். அதற்கான சட்ட நடவடிக்கை உரிய வகையில் இடம்பெறும்." - என்றார்.