எனினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று தொடர்ந்தும் 285 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எவ்வாறாயினும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டு 570 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
இதுதவிர அண்மையில் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று மாற்றமின்றி 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு முதல் இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி - அதிகரித்த எரிபொருள் விலைகள் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.திருத்தப்பட்ட புதிய விலைகளின்படி, லங்கா டீசல் லீற்றரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.லங்கா சுப்பர் டீசல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 543 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று தொடர்ந்தும் 285 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.எவ்வாறாயினும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டு 570 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.இதுதவிர அண்மையில் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று மாற்றமின்றி 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.